Sunday, December 14, 2008

சபாஷ் இது தாண்டா போலீஸ்




இது போன்ற நல்ல முடிவுகளை காவல் துறை எடுப்பது "எங்கெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் நான் அவதரிப்பேன் " என்று கண்ணன் கீதையில் கூறிய படி காவல்துறையிலும் கண்ணன் அவதரித்து உள்ளான் என்பதயே க்காட்டுகிறது

இது போன்ற என்கவுண்டர்கள் சட்டத்தில் சரி என்று ... சட்டம் கொண்டு வரவேண்டும் அப்படி இல்லாத பட்சத்தில் இதுபோல் கண்ணர் கள் அவதரிப்பது தடுக்க முடியாத ஒன்று.....................

Saturday, November 29, 2008


நன்றி தினமலர்











மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
மும்பையில் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த மோதலில், வீரமரணமடைந்த விஜய்சலாஸ்கர், ஹேமந்த் கார்கரே, அசோக் காம்தே உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு படையினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவர்களின் உடலுக்கு பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஹேமந்த் கார்கரேயின் உடல் தகனம் அரசு மரியாதையுடன் மும்பையில் நடைபெறுகிறது.
நன்றி நக்கிரன்

Tuesday, November 25, 2008

ஏறிக்கொண்டிருக்கும் அரிசி விலை

ஏறிக்கொண்டிருக்கும் அரிசி விலை எப்போது
இறங்கும்?
அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த அரிசி விலை உயர்வுக்கு மின்வெட்டுதான் முக்கிய காரணம் என்கிறார்கள் அரிசி வியாபாரிகள். இன்னும் சில நாட்களில் அறுவடை சீசன் தொடங்கி விடும் என்பதால் இந்த விலையேற்றம் குறைய வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
‘’லெவி விதிப்பு உள்ளிட்ட கெடுபிடிகளால் ஆந்திரா, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு நெல் வரத்து குறைந்துள்ளது. மின் தடையாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நெல்சாகுபடி மிகவும் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் அரிசி விலையேற்றம் குறையவேண்டுமென்றால் அரிசி ஆலைகளுக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மட்டுமல்ல, அறிவிக்கப்படாமலும் மின் தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் அறுவடை சீசன் தொடங்கிவிடும் என்பதால் கர்நாடகம், ஆந்திராவில் கெடுபிடிகளை தளர்த்த அந்த மாநில விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசும் இக்கோரிக்கையை ஏற்று விதிமுறைகளை தளர்த்தி வருகிறது.
இதனால் நெல்வரத்து அதிகரித்து அரிசி உற்பத்தி சீரடையவும் விலை குறையவும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.
நன்றி நக்கிரன்

Thursday, November 13, 2008


இந்த சம்ம்பவதை வேடிக்கை பார்த்ததாக காவல் துறை யினர் மேல் நடவடிக்கை .......... மற்றும் பல அரசியல் கட்சிதலைவர்கள் ..குறிப்பாக பலசட்டக்கலுரி மாணவர்கள் காவல் துறையினர் வேடிக்கை பார்த்தார்கள் காப்பற்ற வில்லை என்று கருத்து கூரினார்கள் .சரி இவர்கள் கருத்துப்படி காவல்துறை உள்ளே நுழைந்து இருந்தால் கண்டிப்பாக சிலரை காப்பாற்றும் முயற்சியில் பலரை அடித்து விரட்ட வேண்டிவரும் அதன் பிறகு இந்த அரசியல் கட்சிகளும் இந்த மாணவர்களும் சும்மாவிடுமா காவல்துறையை .........

எனவே காவல்துறை யை மட்டும் குற்றம் சொல்வதை விடுத்து ஆரம்பத்திலேயே மார்க் அடிப்படையில் மட்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் நல்ல தரமனவர்கள்... கல்விபயில வந்தது இருப்பார்கள் இது போல் சம்பவகள் கண்டிப்பாக நடை பெறாது .......................................


இனியாவது படித்த தகுதி உடைய மாணவர்களை கல்வி அடிப்படையில் அனுமதி அளியுங்கள்

இந்த ஜாதி வெறியாட்டத்தை கட்டுப்படுத்த ஆரம்ப கல்வி கூடத்திலெயெ ஜாதியை ஒழிக்க வேண்டும்... கல்வி அனைவற்கும் பொது என்ற நெறி முறை வேண்டும் . அப்படி பட்ட ஆரோகியமான சுழல் வரும்வரை இதுதான் இந்தியாவின் நிலைமை.....அதைவிடுத்து இதை எந்த அரசியல் அமைப்பு வந்தாலும் மாற்றமுடியாது ....................இது இன்னும் தொடரும் .......


மாணவர்களா இல்லை ஜாதி வெறியர்கள !!!!!

இடஒதிகீட்டில் கல்விபயில வந்த ஜாதி வெறியர்கள்