ஏறிக்கொண்டிருக்கும் அரிசி விலை எப்போது
இறங்கும்?
அரிசி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இந்த அரிசி விலை உயர்வுக்கு மின்வெட்டுதான் முக்கிய காரணம் என்கிறார்கள் அரிசி வியாபாரிகள். இன்னும் சில நாட்களில் அறுவடை சீசன் தொடங்கி விடும் என்பதால் இந்த விலையேற்றம் குறைய வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
‘’லெவி விதிப்பு உள்ளிட்ட கெடுபிடிகளால் ஆந்திரா, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு நெல் வரத்து குறைந்துள்ளது. மின் தடையாலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நெல்சாகுபடி மிகவும் குறைந்து வருகிறது.
தமிழகத்தில் அரிசி விலையேற்றம் குறையவேண்டுமென்றால் அரிசி ஆலைகளுக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு மட்டுமல்ல, அறிவிக்கப்படாமலும் மின் தடை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் அறுவடை சீசன் தொடங்கிவிடும் என்பதால் கர்நாடகம், ஆந்திராவில் கெடுபிடிகளை தளர்த்த அந்த மாநில விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசும் இக்கோரிக்கையை ஏற்று விதிமுறைகளை தளர்த்தி வருகிறது.
இதனால் நெல்வரத்து அதிகரித்து அரிசி உற்பத்தி சீரடையவும் விலை குறையவும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கூறுகிறார்கள்.

நன்றி நக்கிரன்

No comments:
Post a Comment